Ads (728x90)

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கையை 37 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது.

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சல்மான் ஆஹா 107 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

இந்நிலையில் 306 வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 48.1 ஓவர்கள் நிறைவில் 268 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget