ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
அதற்கமைய, குழு நிலை விவாதத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுடன் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்கள், சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பிரதிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகள், ஊழல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர்வதில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதே இதன் நோக்கமாகும்.
அத்துடன் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகள், மத்திய மின்னணு முறைமையொன்றின் ஊடாக சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களை சமர்ப்பிக்கும் செயல்முறையை மேலும் முறைமைப்படுத்தல் என்பனவும் அடங்குகின்றன.
.jpeg)
Post a Comment