Ads (728x90)

2027 ஜனவரி மாதம் வரை நீர் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நீர் கட்டண திருத்தங்கள் ஆண்டுக்கு இருமுறை மதிப்பாய்வு செய்யப்படுவதாக கூறிய அவர், அடுத்த மதிப்பாய்வு 2027 ஜனவரியிலேயே திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்மொழியப்படும் எந்தவொரு கட்டண மாற்றமும் நீர் சுத்திகரிப்புச் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே அமையும் என்றும், அது ஜனவரி மதிப்பாய்வின் போது மதிப்பிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget