லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்து 131 ஓட்டங்களைக் குவித்தார். பவன் ரத்நாயக்க 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பாகிஸ்தானியப் பந்துவீச்சாளர்களில் ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், சல்மான் ஆகா மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதற்கமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
Post a Comment