இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா இந்த முக்கிய தகவலை ஊடக சந்திப்பில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
முன்னைய காலகட்டங்களில் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை மூடிவிட்டு, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து அதனை முழுமையாக அகற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு, பரிந்துரைகளும் வழங்கப்பட்டிருந்தன.
ஆனால், தற்போதைய அரசின் திட்டமிடப்பட்ட வியூகங்கள் காரணமாக நட்டத்தில் இயங்கும் என கருதப்பட்ட இந்த ஆலை பாரிய இலாபத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இக்காலப்பகுதியில், இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது நாட்டிற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவியுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முதல் ஒன்பது மாதங்களில் 28 பில்லியன் ரூபா இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.
ஆண்டின் இறுதியில் 28 பில்லியன் முதல் 30 பில்லியன் ரூபா வரையிலான இலாபத்தை எட்டும் என்றும் எதிர்பார்ப்படுகின்றது.

Post a Comment