Ads (728x90)

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் தாழமுக்கம், இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், நாளை மறுதினம் இது புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் இலங்கைக்குக்  கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மட்டக்களப்புக்குக் கிழக்காக ஏறத்தாழ 650 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பகுதியிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வரையிலான கடற்பகுதியிலும், பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதியிலும் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசத்தில் கடலில் இருப்போர் உடனடியாக இப் பிரதேசங்களை விட்டு விலகி பாதுகாப்பான பிரதேசத்திற்கு நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து அல்லது வடக்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget