Ads (728x90)

சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளை இலக்கு வைத்து அமெரிக்கா அறிவித்துள்ள புதிய சுற்று வரி விதிப்பு நடவடிக்கைகளிலிருந்து இலங்கைக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) மேற்கொண்ட 8 மாத கால விசாரணையைத் தொடர்ந்து, 14 முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளை மாளிகையினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வரிகள், அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகள் சிலரைப் பாதிக்கவுள்ளன. இந்த வரி விகிதங்கள் 20 சதவீதம் முதல் அதிகபட்சமாக 40 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதில் சீனா அதிகபட்சமாக 40 சதவீதம் வரையிலான வரியையும், அதனைத் தொடர்ந்து வியட்நாம் 35 சதவீதம் வரையிலான வரியையும் எதிர்கொள்கின்றன. ஏனைய பாதிக்கப்பட்ட நாடுகள் 20 சதவீதம் அல்லது 25 சதவீத வரி விகிதங்களை எதிர்கொள்கின்றன. 

சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, தென் கொரியா, வியட்நாம், தாய்வான், பங்களாதேஷ் மற்றும் ஜப்பான் ஆகிய 14 நாடுகளே இந்த விசாரணைகளின் கீழ் உள்ளடக்கப்பட்டிருந்தன. 


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget