Ads (728x90)

அநுராதபுரம் ருவன்வலிசாய வளாகத்திற்கு அருகில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உட்பட 08 பேர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போராட்டக் களத்தில் ஏற்பட்ட இருதரப்பு மோதல் மற்றும் அமைதியின்மையைத் தொடர்ந்து பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாகிரகப் போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று அங்கு திரண்ட பொதுமக்கள், போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், அங்கு திரண்ட பொதுமக்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரும், இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அநுராதபுர புனித நகர அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ருவன்வலிசாய அருகே நான்கு தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget