வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க விடுத்த கோரிக்கை மற்றும் நுகர்வோர்
எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற் கொண்டு, லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நிர்வாக சபை தீர்மானித்துள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது.12.5 கி.கி. சிலிண்டர் ரூபா 745 இனால் குறைக்கப்பட்டு, இதன் புதிய சில்லறை விலை ரூபா 5,995 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முந்தைய விலை ரூபா 6,740).
5 கி.கி. சிலிண்டர் ரூபா 322 இனால் குறைக்கப்பட்டு, இதன் புதிய சில்லறை விலை ரூபா 2,398 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முந்தைய விலை ரூபா 2,720).
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் சவூதி அராம்கோ எரிவாயு விலை மற்றும் கப்பல் கட்டணங்கள் உயர்வடைந்தபோதிலும், கடந்த 3 மாதங்களாக எவ்வித விலை திருத்தமும் இன்றி நிறுவனம் நஷ்டத்தைச் சுமந்து வந்தது.
இதன் தொடர்ச்சியாகவே அண்மையில் 12.5 கி.கி. சிலிண்டரின் விலை ரூபா 1,775 இனாலும், 5 கி.கி. சிலிண்டர் ரூபா 732 இனாலும் அதிகரிக்கப்பட்டது.
தற்போதைய புதிய குறைந்த விலையில் விற்பனை செய்வதனாலும் நிறுவனத்திற்கு நஷ்டமே ஏற்படும் எனினும், அமைச்சர் வசந்த சமரசிங்க நுகர்வோருக்காக விடுத்த கோரிக்கையை ஏற்று, நுகர்வோருக்கு முன்னுரிமை அளித்து அந்த நஷ்டத்தைச் சுமக்க நிறுவனம் சம்மதித்துள்ளதாக நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
Post a Comment