Ads (728x90)

நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாவுக்கும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 1,750 ரூபாவுக்கும், 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 815 ரூபாவுக்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.

நவம்பர் மாதத்திற்காக மூன்று மில்லியன் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு திறன் உள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அனைத்து வணிக வாடிக்கையாளர்களுக்கும் தேவையான எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதன் மூலம் முழுமையான எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என அதன் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் நிறுவன தொடர்புகள் பணிப்பாளர் ஜனக்க பத்திரண தெரிவித்துள்ளார்.


 

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget