Ads (728x90)

கிரிஷ் நிறுவனத்தின் நிதி முறைகேடு மற்றும் லஞ்சம் தொடர்பான  வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு, டிரான்ஸ்வேர்க் சதுக்கத்திலுள்ள காணியொன்றை இந்திய கிரிஷ் நிறுவனத்திற்கு பன்முகத் திட்டத்திற்காக வழங்குவதற்கான பணிகளைச் செய்து கொடுப்பதற்காக 70 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget