Ads (728x90)

தேவையான பொருட்கள்:
1. பனீர் - 10 துண்டுகள்
2. கெட்டி தயிர் - 1/4 கப்
3. பச்சை மிளகாய் - 2 அல்லது 3
4. பூண்டு - 2 பல்
5. கடுகு - 1/4 தேக்கரண்டி
6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
7. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
8. பெருஞ்சீரகம் - 1/4 தேக்கரண்டி
9. உப்பு
10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
11. எண்ணெய் / வெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:
1.பச்சை மிளகாயை வெறும் கடாயில் வதக்கி பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.

2.கடுகு, சீரகம், வெந்தயம், பெருஞ்சீரகம் எல்லாம் உப்பு சேர்த்து பொடிக்கவும்.

3.தயிர், மஞ்சள் தூள், பொடித்த மசாலா, அரைத்த மிளகாய் பூண்டு விழுது எல்லாம் ஒன்றாக கலந்து இத்துடன் பனீர் துண்டுகள் சேர்த்து நன்றாக பிரட்டி 1 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

4.நான்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பனீர் துண்டுகளை போட்டு மிதமான தீயில் எல்லா பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.

5.சுவையான வாசமான பனீர் டிக்கா தயார். இதை ஒரு முறை செய்து சுவை பார்த்தால் அடிக்கடி வீட்டிலேயே பனீர் டிக்கா செய்ய வைக்கும்.

TIP
பொடிப்பது, அரைப்பது எல்லாம் மிக்ஸியில் போடாமல் கையால் செய்தால் மிகுந்த சுவையாக இருக்கும். இதை அவனிலும் க்ரில் செய்யலாம், அல்லது அவனில் சாதாரன ட்ரேவில் வெண்ணெய் தடவி வைத்து சமைக்கலாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget