Ads (728x90)


கருணைக்கிழங்கு குழம்பு

தேவையான பொருட்கள்:
கருணைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சிறு எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:
கருணைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.

வெங்காயம், தக்காளி வதங்கியதும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு போட்டு வதக்கவும்.

பிறகு புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வதக்கியவற்றுடன் ஊற்றி கொதிக்க விடவும்.

கருணைக்கிழங்கை வட்டமான துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் குழம்பில் போட்டு கெட்டியானதும் இறக்கவும்.

சுவையான கருணைக்கிழங்கு குழம்பு தயார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget