Mint Tea/மின்ட் டீ
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
டீ பேக் - ஒன்று
எலுமிச்சை சாறு - சில துளிகள்
சர்க்கரை - தேவைக்கேற்ப
செய்முறை:
1.புதினா இலைகளைச் சுத்தம் செய்து, ஒன்றரை கப் நீரில் போட்டு கொதிக்கவிடவும்.
2.நன்றாகக் கொதித்து புதினா வாசமும் சுவையும் நன்கு நீரில் ஊறிய பிறகு எடுத்து வடிகட்டவும். வடிகட்டிய நீரை இரண்டு கோப்பைகளில் ஊற்றி டீ பேக்கை டிப் செய்து எடுக்கவும். அதிக நேரம் டீ பேக்கை போட்டு வைக்கக் கூடாது. சில வினாடிகளில் எடுத்து விட வேண்டும்.
3.அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து பரிமாறவும்.
4.சுவையான, ஆரோக்கியமான மின்ட் டீ தயார். மாலை நேரம், மழை நேரம் மற்றும் தலைவலியாக இருக்கும் போது இந்த டீயைப் பருகினால் நிச்சயமாக மிகவும் ஃப்ரெஷ்ஷாக உணர முடியும்.
TIP
புதினாவின் சுவை தூக்கலாக இருக்க வேண்டும். அதனால் எலுமிச்சை சில துளிகள் மட்டுமே சேர்த்தால் போதும்.

Post a Comment