Ads (728x90)

ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?: நாளை 2–வது ஆட்டம்

கானே  தமையிலான இந்திய 2–வது கட்ட அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஹராரேயில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்னில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்புக்கு சென்ற பிறகே போராடி இந்த வெற்றியை பெற முடிந்தது.

இந்தியா–ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2–வது ஒருநாள் போட்டி ஹராரேயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்காத வகையில் ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு கடும் சவாலாகவே இருந்தது. பேட்டிங், பந்துவீச்சில் அந்த அணி எல்லா வகையிலும் சமபலத்துடன் உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் தொடரை வெல்ல கடுமையாக போராட வேண்டும்.

முதல் ஆட்டத்தில் அம்பதி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, கேப்டன் ரகானே ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார், ஹர்பஜன்சிங், அக்ஷர் பட்டேல் சிறப்பாக செயல் பட்டனர்.

சொந்த மண்ணில் விளையாடுவதால் ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு கடும் போட்டியை கொடுத்தது. 2–வது ஆட்டத்திலும் அந்த அணி வீரர்கள் கடும் சவால் கொடுக்கும் வகையில் விளையாடுகிறார்கள்.

அந்த அணி கேப்டன் சிங்கும்புரா சதம் அடித்து நல்ல நிலையில் உள்ளார். ஆனால் அவரால் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் போனது பரிதாபமே.

ஜிம்பாப்வே அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் முழு திறமையை வெளிப்படுத்தினால் தான் இந்தியா தொடரை கைப்பற்ற இயலும்.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. டென் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது

Post a Comment

Recent News

Recent Posts Widget