Ads (728x90)

இலங்கை - பாகிஸ்தான் இறுதிநாள் ஆட்டம் இன்று!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று (07) கண்டி பல்லேகல மைதானத்தில்  ஆரம்பமாகியுள்ளது.

377 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கட்டுக்களை இழந்த நிலையில், 230 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது விளையாட்டினை ஆரம்பித்துள்ள பாகிஸ்தான் அணியினர் ஒரு ஓவர் வரையில் நிறைவு செய்துள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் 278 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பாகிஸ்தான் அணி தமது முதலாவது இன்னிங்சிற்காக 215 ஓட்டங்களைப் பெற்றது. தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 313 ஓட்டங்களைப் பெற்றது. இதற்கு அமைய பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு 8 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் 147 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன. போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget