Ads (728x90)

மூன்று கெட்டப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ரஜினிமுருகன் படத்திற்கு பிறகு, அவர் அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இப்படத்தில் இந்திய மற்றும் சர்வதேச தொழில்நுட்ப கலைஞர்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றவிருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரான ராஜா தயாரிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ரசூல் பூக்குட்டி சவுண்ட் என்ஜினியராகவும், ஐ படத்தில் விக்ரமுக்கு மேக்கப் செய்த ஷான் ஃபுட் இந்த படத்தில் மேக்கப் பணியை மேற்கொள்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. வாலிபர், முதியவர் மற்றும் பெண் வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நடிகையை தேர்வு செய்தபிறகு அக்டோபர் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget