
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். மனிஷா யாதவ், ஆனந்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பிரியா ஆனந்த், ஆர்யா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனராக களமிறங்கியிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன், முதல் படத்திலேயே பேசப்படும் இயக்குனராக மாறியிருக்கிறார். இந்நிலையில், அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக ஆதிக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நான் மூன்று கதைகளை தயார் செய்து வைத்துள்ளேன். இந்த கதைகளில் அஜித்தை வைத்து இயக்க ஆசைப்படுகிறேன். இது என்னுடைய நீண்டநாள் கனவு என்று கூறியுள்ளார்.
ஆதிக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ யதார்த்தமான, வலுவான காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.
Post a Comment