Ads (728x90)

பாப்பரசரின்  ஈக்குவடோருக்கான விஜயம்!

தென்அமெரிக்காவில் உள்ள சில வறிய நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக சென்றுள்ள பாப்பரசர் பிரான்சிஸ் முதலில் ஈக்குவடோருக்கு சென்றடைந்தார். அப்போது ஈக்குவடோரில் ஆயிரக்கணக்கான மக்கள் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அங்கு விமானத்திலிருந்து இறங்கியவுடன் மக்கள் முன் பேசிய பாப்பரசர், உலகின் வளர்ச்சியிலும் அபிவிருத்தியிலும் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பலனடையக் கூடியதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

அதனைத் தொடரந்து குவாஜகில் கரையோர நகரில் நேற்று மாலை நடைபெற்ற  திருப்பலி பூஜையிலும் பாப்பரசர் கலந்து கொண்டார்.   அடுத்து, பொலிவியா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் பயணிக்கவுள்ளார்.

2013 ஆம் ஆண்டு பாப்பரசர் பொறுப்புக்களை ஏற்ற பின்னர் தென்அமெரிக்க பிராந்தியத்திற்கு அவர் விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆஜென்ரினாவைச் சேர்ந்த பரிசுத்தப் பாப்பரசர் பிரான்ஸ்சிஸ் தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் இருந்து தெரிவான முதலாவது பாப்பரசராக பதிவாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget