
விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இடையில், நடிகர் சங்க தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்திற்கு சமீபத்தில் பூஜை போடப்பட்டது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து 2 வாரங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடிக்கவிருக்கிறார். மேலும், சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘ஆம்பள’ படத்திற்கு பிறகு விஷால் நடிக்கும் இப்படத்திற்கு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயன்தாரா நடித்து வரும் ‘இது நம்ம ஆளு’ படமும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மட்டும் இன்னும் படமாக்கப்படவுள்ளது. அது முடிந்தபின், இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
Post a Comment