Ads (728x90)

ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்: ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் சாவு

ப்கானிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் உள்பட 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் மறைந்து இருக்கும் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தானில் உள்ள நான்கர்ஹர் என்ற இடத்தில் அமெரிக்கா இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் எல்லையை ஒட்டி நடந்த இந்த தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் மூத்த தலைவரும், தாலிபான் அமைப்பின் முன்னாள் செய்தி தொடர்பாளருமான சகித்துல்லா சாகித் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் சாகித் தவிர மேலும் 23 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

சகித்துல்லா சாகித் கொலை செய்யப்பட்டிருப்பதை ஆப்கானிஸ்தான் உறுதி செய்துள்ளது. இத்தகவலை அந்நாட்டின் உளவு அமைப்பு தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட சகித்துல்லா சாகித் பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். பின்னர் அவ்வமைப்புக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் அங்கிருந்து வெளியேறி ஐ.எஸ். அமைப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget