
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த அணியில் இடம் பெற்றுள்ள உத்தப்பா முழுமையாக ஒரு தொடர் விளையாட போவது உற்சாகம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டி வரும் 10, 12 மற்றும் 14-ந்தேதிகளிலும், டி20 போட்டி 17 மற்றும் 19-ந்தேதிகளிலும் நடக்கிறது. இந்த தொடர் பற்றி ராபின் உத்தப்பா கூறும் போது "கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாட வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால் ஜிம்பாப்வேக்கு எதிராக முழுமையாக ஒரு தொடர் விளையாட போவது உற்சாகம் அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
இத்தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ராபின் உத்தப்பா இருப்பார் எனக் கூறப்படுகிறது.
Post a Comment