Ads (728x90)

சதம் அடித்த அம்பதி ராயுடுவுக்கு ரகானே பாராட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரகானே கூறியதாவது:–
பரபரப்பான ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆடுகளத்தில் என்னை பார்த்தால் எந்தவித பதட்டமும் இல்லாமல் இருந்தது தெரியும். ஆனால் உள்ளூக்குள் அதிகமான பதட்டம் காணப்பட்டது.

ஜிம்பாப்வே கேப்டன் அந்த அளவுக்கு சிறப்பாக விளையாடினார். இறுதியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியை தந்தது. பேட்டிங், பவுலிங் சிறப்பாக இருந்தது. அனைத்து வீரர்களும் நன்றாக ஆடினார்கள். குறிப்பாக அம்பதி ராயுடுவின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது.

ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதானது கிடையாது. அவர் பிரமாதமாக ஆடி ரன்களை குவித்தார்.

நாங்கள் கூடுதலாக 10 முதல் 15 ரன்கள் வரை எடுத்து இருக்க வேண்டும். ஹர்பஜன்சிங், அக்ஷர் பட்டேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அம்பதிராயுடு 133 பந்தில் 124 ரன்கள் (12 பவுண்டரி, 1 சிக்சர்) குவித்து ஆட்டநாயகர் விருதை பெற்றார்.

4 ரன்னில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஜிம்பாப்வே கேப்டன் சிங்கும்புரா கூறும்போது, மிகவும் நெருங்கி வந்து தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் சில விஷயத்தில் இன்னும் பாடம் கற்க வேண்டும். ஆனால் எங்களது ஆட்டம் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது. வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget