
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசி அன்பர்களே!
குரு பகவான் 05-07-2015 முதல் உங்கள் ராசிக்கு 12-ல் வருகிறார். அதனால் விரயத்தை ஏற்படுத்துவார் என நீங்கள் பயம்கொள்ளக்கூடாது. குரு பகவான் சிம்மத்தில் அமர்ந்து 5-ஆம் பார்வையாக தனுசு வீட்டைப் பார்க்கிறார். எந்த கிரகம் தன் சொந்தவீட்டைப் பார்க்கிறதோ அதனால் நன்மையுண்டு. தீமைகள் ஏற்படாது என்றாலும், கன்னி ராசி அன்பர்கள் பொருளாதாரத்தில் மிகவும் சிக்கனத்தைக் கையாளவேண்டும். உடல்நலத்தைக் காப்பாற்ற நல்ல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவசரத்துக்கென்று மெடிக்கல் ‘ஷாப்பில் மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது. நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறையருள் உள்ளவர்கள் பயம்கொள்ளத் தேவையில்லை. மற்றவர்களுக்கு கெடுதல் செய்துவருகிறவர்கள் மட்டுமே விரய ஸ்தானத்தில் உள்ள குருவால் விரயத்தைச் சந்திப்பார்கள். பொருளாதாரச் சிக்கல் வராமலிருக்க சிக்கனம் ஒன்றே வழி. யாரிடமும் காரியங்களை நடத்த உதவுகிறேன் என்று வாக்கு கொடுக்காதீர்கள். பணவரவில் மந்தம் இருந்தாலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்கள் உங்களுடன் நேசமாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் அகலும். சொத்துப் பிரிவினையில் உள்ள பிரச்சினைகள் சுமுகமான தீர்வுக்கு வரும். அரசு ஊழியர்கள் இடமாற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. விரும்பி இடமாற்றம் வேண்டினால் வம்புகள் வந்துசேரும். தூரதேசப் பயணம் சென்றவர்கள் கூடுதலான லாபத்தையடைந்து குடும்ப சீர்திருத்தங்களைச் செய்வார்கள். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த அரசாங்க உதவிகளை அடைவார்கள். பிரிந்து வாழ்ந்துவரும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். போட்டியாக இருந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். வாகன வசதிக்குக் குறைவில்லை. வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பிரிந்துசென்ற உங்கள் மகன் தாய், தந்தையரைக் காண வந்துசேர்வார். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்கமுடியாத சம்பவங்கள் உங்களைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கும். அயல்நாடு சென்றுள்ளவர்களில் ஒருசிலர் திட்டமிட்டபடி வேறு நாடுகள் செல்வார்கள். தாய்- தந்தையர், பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும்.
05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா
12-ல் அமர்ந்துள்ள குருபகவான், கேது சாரம் பெற்றுவரும் இந்த நேரத்தில் வீடு, மனை, பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் எச்சரிக்கையாகக் கையாளவேண்டும். எப்போதும் நீங்கள் ஒரேபோக்கில் நிதானித்துச் செயல்படுவது நல்லது. புதிய நபர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்கக்கூடாது. தெய்வ தரிசனத்திற்காக கூடுதல் தொகையை செலவுசெய்வீர்கள். விரய குரு வந்துவிட்டதே என்று கவலை வேண்டாம். உங்களை விரயம் செய்ய வருகிறவர்கள் அவர்களே விரயத்தையடைந்து உங்களைவிட்டு ஓடிவிடுவார்கள். முந்தைய கால சேமிப்பு இப்போது உங்களுக்குக் கைகொடுக்கும்.
24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா
அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் உங்களுக்கு லாபம் ஏற்படும். தொட்ட காரியம் அனைத்தும் துளிர்விடும். கடந்தகாலத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் உங்களுக்கு லாபகரமாக அமையும். உடல்நிலையும் சீராகும். பொருளாதார வகையில் இருந்துவந்த தட்டுப்பாடுகள் நீங்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்துநீங்கும். அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் உடன்பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் சில சிரமங்களை நீங்கள் அடையநேரும். உடன்பிறந்தவர்கள் சொல்லும் கருத்துகளை நீங்கள் பொருட்படுத்தக்கூடாது. குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்து வதற்காக சில கருத்துகளை அவர்கள் சொல்வார்கள். தொழிலதிபர்கள்- தொழிலாளி உறவில் விரிசல் எதுவும் வராது.
28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா
இப்போது நீங்கள் எதிர்பாராத வகையில் பொருளாதார உயர்வு ஏற்படும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் சீராக இருக்கும். அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்தபடி மாறுதலை அடைவார்கள். ஒருசிலர் பதவி உயர்வு, ஊதிய உயர்வை அடைவார்கள். தொழிலாளிகள் பேச்சுவார்த்தை மூலம் நிலுவை சம்பளத்தை பெறுவார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். கூடுதல் வருமானம் உண்டு. தொட்ட காரியம் அனைத்திலும் கூடுதல் வருவாயைப் பெறுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள்.
16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்
இந்தக் காலகட்டத்தில் அரசுத் தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருப் பவர்கள் வெற்றி என்ற செய்தியைக் கேட்பார்கள். மேலும் விரும்பிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள். தாய்- தந்தையர் உடல்நலன் கருதி மேற்கொண்ட சிகிச்சை சிறப்பாக அமையும். அவர்கள் உடல்நலம் சீராக அமையும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காணலாம். அரசாங்க வேலையிலுள்ளவர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வை அடைவார்கள். கூடுதல் வருவாயையும் பெறுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். பிரிந்துவாழும் தம்பதியர் எந்த நிபந்தனையுமின்றி ஒன்றுசேர்வார்கள். கூட்டுத் தொழில் செய்யும் ஒருசிலர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொல்லை கொடுத்துவந்த உடல்நிலை சீராகும்.
08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்
இப்போது நீங்கள் மிகவும் கறுப்பாக உள்ளவர்களிடம் எச்சரிக் கையாக இருக்கவேண்டும். அவர்களின் ஆலோசனைகளைக் கேட்கா தீர்கள். புதிய தொழில் விருத்தி ஏற்படும். தேவைக்கு அதிகமான பணவசதியைப் பெறுவீர்கள். உங்கள் நண்பர்கள் ஜாமீன் போடும்படி உங்களை வற்புறுத்துவார்கள். ஜாமீன் போடாதீர்கள். போட்டால் நீங்கள் தான் அந்தத் தொகையைக் கட்டவேண்டிய சூழல் ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் உயர்வார்கள். அவர்கள் தொழில் செய்யும் இடத்திலும் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். கணவன்-மனைவி உறவில் விரிசல் வராது. மனைவியின் உடல்நிலையில் சற்று கவனமாக இருக்கவேண்டும்.
15-06-2016 முதல் 09-07-2016 வரையிலும் குரு, சுக்கிரன் சாரத்தில் உலா
இந்த காலகட்டத்தில் நீங்கள் புத்துணர்வோடு செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களின் தேவை பூர்த்தியாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த குளறுபடிகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். உடன்பிறந்தவர்கள் மத்தியில் சொத்துப் பிரச்சினைக்காக ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மாறும். தாய்- தந்தையருக்கு செய்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. குடும்பத்தில் நடக்கவேண்டிய சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். காதலர்கள் எண்ணம் கைகூடும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவு செய்ய போட்ட திட்டம் நிறைவேறும். விரய குரு இப்போது உங்களுக்கு லாபத்தைத் தரும் குருவாக இருப்பார்.
10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் உலா
இப்போது பிள்ளைகள் வழியில் செலவுகள் கூடுதலாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கமாட்டார்கள். அவர்களால் நன்மைகள் ஏற்படாது. தன விரயங்கள் ஏற்படும். எனவே எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். வெளிநாடு செல்ல நினைத்த வர்கள் திட்டமிட்டபடி செல்வதில் பிரச்சினை ஏற்படும். எனவே தாமதித்து பயணத்தைத் தொடங்கவேண்டும். ஆண்களில் இரண்டாம் தாரம் கட்டுபவர்கள் பாடு திண்டாட்டம். நல்ல மனைவி அமைவது கஷ்டம். வீடு கட்ட போட்ட திட்டம் நிறைவேறும். விவசாயிகள் விளை நிலங்களில் நல்ல மகசூலைப் பெறுவார்கள். ஒருசிலரின் தாய்- தந்தையர் வழியில் மருத்துவச் செலவுகள் கூடுதலாகும். தொழிலதிபர்கள் அரசாங் கத்தில் எதிர்பார்த்த நிதியுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுபகாரிய நிகழ்வுகள் கைகூடி வரும். நல்ல வரனாகத் தேர்வு செய்யவேண்டும்.
அரசு ஊழியர்கள்
அரசுப் பணியில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். மேலதிகாரிகளிடம் ஒத்துப் போகின்ற மனப்பக்குவம் வரவேண்டும். ஒருசிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், இடமாற்றமும் வருவதில் தாமதமாகும். இப்போது, நீங்கள் கடைப்பிடிக்கும் பொறுமை யால் உங்களுக்கு ஆண்டு முடிவில் நன்மைகள் வந்துசேரும். கையூட்டுப் பெறுகின்ற அரசு ஊழியர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். காவல்துறை நடவடிக்கை வரலாம்.
வியாபாரிகள்
கொள்முதல் செய்வதைக் குறைத்துச் செய்யவேண்டும். வியாபாரம் மந்தமான நிலையில் இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிதாக கிளை துவங்க போட்ட திட்டம் இழுபறி யாகும். வாகனங்களில் பழுது வந்துநீங்கும். எதையும் யோசித்துச் செய்ய வேண்டும்.
தொழிலாளர்கள், தொழிலதிபர்கள்
தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கிட எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும். அரசாங்க சலுகைகளும் கிடைக்கும். தொழிலாளர்களிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். கதவடைப்பு போன்ற நிலைகள் உருவாகலாம். நீங்கள் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய சலுகைகளைக் கொடுத்துவிடவேண்டும். அதனால் உற்பத்தி பெருகும். தொழிலாளர் களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்திலும் பிரச்சினை, வேலைபார்க்கும் இடத்திலும் பிரச்சினை என்ற நிலை ஏற்படலாம். எனவே தொழிலாளர்கள் வேலைசெய்வதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது.
பெண்கள்
பெண்களைப் பொறுத்தவரையில் இந்த குருப்பெயர்ச்சியில் கூடுதல் வேலைப்பளுவை சந்திப்பார்கள். ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளாமல் மாமியார், மருமகள் சண்டை வரலாம். எனவே எதையும் யோசித்துப் பேச வேண்டும். மாமியார் விட்டுக்கொடுப்பது சுலபம். மருமகள் விட்டுக் கொடுப்பது கஷ்டம். புதிய பொன், பொருள், ஆபரணம், இடச்சேர்க்கை உண்டு. உடன்பிறந்த சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருக்க மாட்டார்கள். எனவே அவர்களுடன் நெருக்கமான உறவைத் தவிர்க்கவேண்டும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் ஆவணிக்குமேல் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி நேசம் குறையாது. பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.
மாணவர்கள்
தொழிற்கல்வி பயில்பவர்கள் புதிய ஆராய்ச்சிகளைச் செய்து வெற்றிபெறுவார்கள். அவர்களது கண்டுபிடிப்புக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். மாணவர்கள் கணக்குப் பாடத்தை மிகவும் கவனமாகப் படிக்கவேண்டும். கணக்குப் பாடம் ஒன்றுதான் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். மற்ற பாடங்களில் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவார்கள். மேற்படிப்புக்காக எதிர்பார்த்த வங்கிக்கடன் கிடைக்கும்.
கலைஞர்கள்
கலைஞர்களைப் பொறுத்தமட்டில் இது ஒரு பொற்காலம். புதிய படவாய்ப்புகள் வந்துசேரும். சினிமாவில் ஒதுக்கி வைக்கப்பட்டவர் களுக்கு மீண்டும் வாய்ப்புகள் கைகூடி வரும். இப்போது நீங்கள் கால்ஷீட்படி பணியைச் செய்தால் மிகவும் உயர்ந்த இடத்திற்கு வருவீர்கள். பொதுமக்களால் பாராட்டப்படுவீர்கள். குறைந்த செலவு பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். நடிக்க வாய்ப்புத் தேடி அலையும் நபர்கள், புதிய வாய்ப்புகளைப் பெறு வீர்கள். முதல் படமே வெற்றிப் படமாக அமையும். போட்டி பொறா மைகள் உண்டு. ஆனால் குலதெய்வ அருளால் அவை விலகிச்செல்லும்.
விவசாயிகள்
இந்த ஆண்டில் விவசாயத்தில் நல்ல மகசூலைப் பெறுவார்கள். விவசாயத் துறையினர் சொல்லும் புதிய வழிமுறைகள் விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். கடன் தொல்லைகள் குறையும். கானல் நீராய் இருந்த நிலுவைத் தொகைகள் நீங்கள் கேட்காமலே வந்துசேரும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடி வரும். அயல்நாடுகளில் உள்ள பிள்ளைகள் உங்களுக்கு பணத்தை அனுப்பி, சொத்துக்களை மேலும் வாங்குவார்கள். நிலம், மாடு, கன்று, பால் பாக்கிய விருத்திக்கு குறைவில்லை.
அரசியல் பிரமுகர்கள்
உங்கள் செயல்கள் பொதுமக்களால் பேசப்படும். புகழ் கூடும். தலைமை இவர்களை கவனித்து புதிய பதவிகளைத் தருவார்கள். அரசியலில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிச்செல்வார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:
குரு பகவான் விரயத்தில் வருவதால் தொல்லைகள் அதிகமில்லை. குரு இருப்பது உங்கள் ராசிக்கு நட்பு வீடு. எதிலும் நிதானித்துச் செல்ல வேண்டும். கணவன்-மனைவி ஒற்றுமைக்குக் குறைவில்லை. நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். பொருளாதார உயர்வுண்டு. செய்யும் தொழிலில் வருமானக் குறைவு வராது. எல்லா வசதிகளும் தேவைகளும் பூர்த்தியாகும். 80 சதவிகித நன்மையுண்டு.
ஹஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு:
இப்போது உங்களுக்கு கிடைக்கும் நல்ல அனுபவங்கள் பிற்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலை தேடுபவர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். அரசு வேலையும் ஒருசிலருக்கு கிட்டும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். கொடுமைக்கார மாமியார்கள் இறைவனின் தண்டனையை அடைவார்கள். எப்போதும் நிதானமாகச் செயல்பட்டு காரிய வெற்றிகளை அடையவேண்டும். 75 சதவிகித நன்மையுண்டு.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:
அரசு வேலை தேடுபவர்களுக்கு, அரசுப் பணி கிடைக்கும் நேரமிது. உடல்நிலையில் பாதிப்பு எதுவுமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குருபகவான் அருளால் நல்ல ஆண் வாரிசுகளை அடைவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவில்லை. தொழில் சிறப்பாக நடக்கும். கூடுதல் வருவாயும் கிட்டும். தூரதேசப்பயணம் கைகொடுக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். 70 சதவிகித நன்மையுண்டு.
பரிகாரம்
குருபகவான் 12-ல் அமர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் விரயங்கள் எதுவும் வராமலிருக்க வாரந்தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வருவது நல்லது. 27 கொண்டைக்கடலை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து பர்சில் அல்லது பையில் வைத்துக் கொள்ள வேண்டும். முருகப் பெருமானையும் குரு பகவானையும் தரிசித்து வர நன்மைகள் உண்டு.
Post a Comment