மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசி அன்பர்களே!
இந்த ஆண்டு குருபகவான் 5-ல் வருகின்றார். இதனால் உங்களுக்கு வரவுள்ள நன்மைகள் அதிகம். அதேசமயம் சனிபகவான் 16-12-2014 முதல் அஷ்டமத்தில் இருப்பதால் உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் வந்துசேரும். அதுவும் தீய நண்பர்களின் செயலால்தான் வந்துசேரும். எனவே நண்பர்கள் சகவாசத்தை அறிவுடன் ஒதுக்கிவைத்தால் இன்னல்கள் வராமல் இருக்கும். குடும்பத்தில் தொல்லைகள் வராது. கஷ்டங்கள் தீர்ந்து ஓரளவு நல்ல பலன்கள் கிட்டும். மனதை இறுக்கமாக வைத்துக்கொள்வதால் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். வரவுக்கேற்ற செலவு செய்தால் மட்டுமே வாழ்க்கையில் நீங்கள் உயரமுடியும்.
மேஷ‘ராசியில், அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்கள் தங்கள் நண்பர்கள் சகவாசத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். உங்களை நட்டாற்றில் விட்டுவிடுவார்கள். அவர்களது கலக வார்த்தைகளை நம்பாமல் விட்டால்தான் வாழ்வில் உயரமுடியும். ஆர்ப்பாட்டமான செயல்களால் உங்கள் வாழ்வில் நீங்கள் பெறவுள்ள நன்மைகள் பறிபோகும். எனவே அமைதியாகச் செயல்பட்டு நன்மை காணுங்கள். உடல்நலன் சீராக இருக்கும். மனதில் தெளிவுபிறக்கும். பெற்றோர்களால் நன்மையை அடைவார்கள். உறவினர்களால் நன்மையுண்டு. நண்பர்கள் மற்றும் வெளிவட்டாரத் தொடர்புகளால் தேவையில்லாத செலவுகள் வரலாம். எனவே கவனத்துடன் செயல்படவும். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் வந்துநீங்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். தொழிலதிபர்கள்- தொழிலாளி ஒற்றுமை ஏற்படும். குருப்பெயர்ச்சியால் அதிகமான பாதகங்கள் எதுவுமில்லை.
05-07-2015 முதல் 23-08-2015 வரை குரு, கேது சாரத்தில் நேர்கதியில் உலா
இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். தடைகள் அனைத்தும் நீங்கிவிடும். எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். கஷ்ட ஜீவனத்தை ஆண்டவன் முடித்துவைத்து, நல்ல ஜீவனத்தை உங்களுக்குத் தந்துள்ளார். திடீர் பணவரவுகள் வந்துசேரும். நீண்டகாலமாக வராமலிருந்த பழைய கடன்கள் வசூலாகும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த கல்விக்கடன் கிட்டும். ஒருசிலர் தொழிலை விரிவுசெய்வதற்காக எடுத்த முயற்சிகள் பலிதமாகும். வங்கியிலிருந்து தேவையான அளவு கடன்வசதி கிட்டும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி மாறுதலைக் காண்பார்கள். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தேடிவரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனையில் இருந்தவர்கள், இப்போது மீண்டும் பணி அமர்வு பெறுவார்கள். வழக்குகளின் தீர்ப்பு சாதகமாக அமையும்.
24-08-2015 முதல் 27-10-2015 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலா
இந்த காலகட்டத்தில் நீங்கள் சற்று அமைதிகாத்து காரியங்களை செய்யவேண்டும். கறுப்பு நிறமுள்ளவர்கள் உங்களிடம் நல்லவரைப்போல் நடித்து ஏமாற்றுவார்கள். அவர்களது வழிகாட்டுதலில் பொருளாதாரத்தை முடக்கக்கூடாது. மனதிலும் குழப்பமான சூழ்நிலை இருந்துவரும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழி பேசுகிறவர்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிநாடு சென்று தொழில் செய்ய நினைத்தவர்களின் எண்ணம் ஈடேறும். பூர்வீக சொத்து சம்பந்தமாக உடன்பிறந்தவர்கள் மத்தியில் வீண் மனஸ்தாபம் வரும். சகோதரர்களை விட சகோதரிகளே கெடுதல் செய்பவர்களாக இருப்பார்கள். செலவுகள் கூடுதலாகும். அதேசமயம் மறைமுக வருமானம் கூடுதலாகும். கணவன்- மனைவி உறவில் விரிசல் வராது. பிரிந்துசென்ற தம்பதியர் இப்போது ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து வருவார்கள். உயர் கல்வியில் உள்ள மாணவர்கள் கல்விக்காலம் முடிந்த பிறகு நல்ல வேலையில் அமர்வார்கள்.
28-10-2015 முதல் 15-01-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலா
இப்போது கடந்தகாலத்தில் தடைப்பட்டுவந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பண உதவிகள் வந்துசேரும். சொத்துப் பிரிவினையில் இருந்துவந்த பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். முன்னர் ஏற்பட்ட கடன்களை இப்போது அடைத்து முடிப்பீர்கள். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். வெளிவட்டாரப் பழக்கத்தில் வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். கணவன்- மனைவி உறவில் இருந்துவந்த இருண்ட சூழ்நிலை மறையும். சுமுக உறவுகள் தொடரும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு நல்ல குழந்தைகள் பிறக்கும். காணாமல்போன மகன் வந்துசேர்வார். பிள்ளைகளுக்காக எடுத்த சுபகாரிய முயற்சிகள் வெற்றியாகும். மாமியார்-மருமகள் சண்டை தீரும். இருவரும் நேசமாக வாழ்வார்கள்.
16-01-2016 முதல் 07-02-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் வக்ரம்
குருபகவான் வக்ரம்பெறும் இந்த நேரத்தில் எல்லா வகையிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் நலனில் மிகவும் அக்கறை கொள்ளவேண்டும். வயதான பெற்றோர்களுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். காதலர்கள் எண்ணம் கைகூடாது. வாகனத்தில் பயணம் செய்யும்போது மிகவும் கவனத்துடன் செல்வது நல்லது. காண்டிராக்ட் போன்ற தொழில் செய்கின்றவர்களுக்கு அரசு அலுவலகத்திலிருந்து எதிர்பார்த்த பணம் வருவதில் தாமதமாகலாம். அரசாங்க ஊழியர்கள் தங்கள் பணியில் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் உங்களுடன் பணிபுரியும் சிலர், உங்களுக்கு எதிரான கருத்துகளை மேலதிகாரிகளிடம் சொல்வார்கள். எனவே மிகவும் எச்சரிக்கையாகப் பணிபுரிய வேண்டும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. அப்படிப் போட்டால் அதற்கான கடன்தொகையை நீங்களே கட்டவேண்டியது வரும். எனவே எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். சுபகாரிய நிகழ்ச்சிகளை இரண்டு மாதகாலம் தள்ளி வைக்கவேண்டும்.
08-02-2016 முதல் 14-06-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் வக்ரம்
அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் நல்ல பலன் கிட்டும். அவர்கள் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வெளிநாடு சென்று ஒருசிலர் வேலைசெய்ய போட்ட திட்டம் நிறைவேறும். வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன், தொழில் தனத்துடன் வாழ்வீர்கள். நீண்டகாலமாக வெளிநாட்டில் வாழ்ந்துவந்த மகன் இப்போது தாய், தந்தையரைக் காண வந்துசெல்வார். சகோதரர்கள் வழியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். எவ்வளவு எதிர்ப்பு அலை வந்தாலும் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள். தூரதேசப் பயணம் நல்ல பணத்தையும், வெற்றியையும் தரும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை பூர்த்தியாகும். வங்கியின் சேமிப்பு நிலை உயரும். இதற்குமுன்னர் உங்களைத் தூற்றியவர்கள் பின்னாளில் வந்துசேர்வார்கள். அதற்கான அச்சாரத்தை இப்போதே போட்டுவிடுவார்கள். பொருளாதார வளர்ச்சியில் குறைவில்லை. கஷ்டமும் குறைந்துவிடும்.
15-06-2016 முதல் 09-07-2016 வரை குரு, சுக்கிரன் சாரத்தில் நேர்கதியில் உலாமற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நீங்கள் எந்த முடிவுக்கும் வரக்கூடாது. இந்த காலகட்டத்தில் மற்றவர்கள் சொல்வது உங்களுக்குத் தீமையாகத் தெரியும். எனவே நியாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். வெளிநாடு சென்று வேலைவாய்ப்பு தேடியவர்கள் தற்போது நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். ஒருசிலருக்கு மத்திய அரசுப் பதவி வந்துசேரும். பெற்றோர்கள் வழியில் மருத்துவச் செலவுகள் கூடும். இப்போது நீங்கள் பொறுமையுடன் செல்லவேண்டும். சுயமாகத் தொழில் செய்கின்றவர்கள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளிகள் தங்கள் பணியில் அதிகமான வேலைப்பளுவை சந்திப்பார்கள். எனவே பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஊதிய வரவுகளில் குறைவிராது. வேண்டாத இடத்திற்கு சில அரசு ஊழியர்கள் மாறுதலை அடைவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தைத் தள்ளிவைக்கவேண்டும். பங்குதாரர் களை அனுசரித்துச் செல்லவேண்டும். குறிப்பாக பங்குதாரர்களில் கறுப்பாக உள்ளவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
10-07-2016 முதல் 01-08-2016 வரை குரு, சூரியன் சாரத்தில் நேர்கதியில் உலாஇப்போது நீங்கள் செய்யும் தொழில்களில் கூடுதல் லாபமுண்டு. எந்த காரியத்தைத் தொட்டாலும் வெற்றியாக முடியும். கடந்த இரண்டு மாத காலமாக இருந்துவந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்துக்கு மாறுதல் பெறுவார்கள். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வந்துசேரும். இந்த மாதம் முழுவதும் அவரவர் தகுதிக்கேற்ப நல்ல பலன்களை பெறுவார்கள். கூடுதல் லாபத்தையும் பெறுவார்கள். தொழில்துறையில் மட்டற்ற உயர்வு உண்டு. வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்கும். முதலாளி- தொழிலாளி ஒற்றுமையால் தொழிற்சாலை சிறக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தை பிறக்கும். நீங்கள் விரும்பியபடி உங்கள் பிள்ளைகள் கல்வியில் உயர்வார்கள். ஒருசிலரின் பிள்ளைகள் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புக்கு போகும் அளவில் மெரிட்டில் மதிப்பெண்களைப் பெறுவார்கள். குடும்பத்திலுள்ள அனைவரும் அனுசரித்துச் செல்வார்கள். சண்டை, சச்சரவுகள் நீங்கும். வெளிநாடுகளில் தொழில்செய்யும் பிள்ளைகள் நல்ல வருவாயைப் பெறுவார்கள். பெற்றோர்கள் விரும்பியதை வாங்கிக்கொடுப்பார்கள். உங்கள் உடன்பிறந்த சகோதரியினால் தொந்தரவுகள் அதிகம் வரலாம். அவர்களிடம் யோசித்துப் பேசவேண்டும்.
அரசு ஊழியர்கள்
இதுவரை நீங்கள் பட்ட சிரமத்திற்கு இந்த குருப்பெயர்ச்சி ஒரு பொற்காலம். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணிமாற்றம் அனைத்தும் வந்துசேரும். ஒருசில அரசு ஊழியர்கள் வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். தொல்லை கொடுத்துவந்த சக ஊழியர்கள் விலகிச் செல்வார்கள். கையூட்டு பெறுவதை நிறுத்திக்கொள்ளும் சில அரசு ஊழியர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது. உங்களைவிட்டு விலகிச் சென்ற சொந்தங்கள் வந்துசேரும்.
வியாபாரிகள்
வியாபாரிகள் கூட்டுத் தொழில் செய்வது சிறப்பில்லை. கூட்டாளிகளுக்குள் சண்டைவரும். தனியாக தொழில்செய்வது உத்தமம். நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். புதிதாக கிளைகளைத் துவங்குவீர்கள். விலகிச்சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கொள்முதல் பொருட்கள் அனைத்தும் விற்பனையாகும். அரசாங்க கெடுபிடிகளை சந்திக்கவேண்டி வரும். எனவே கணக்குகளை சரியாக வைத்துக்கொள்வது உத்தமம். போட்டி வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். கிடைக்கும் லாபத்திற்கு ஆபரணங்கள் வாங்கிச் சேர்ப்பீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.
தொழிலாளர் மற்றும் தொழிலதிபர்கள்
தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வெளிநாட்டு ஆர்டர்கள் வந்து சேரும். அதற்கேற்றபடி பொருட்களை சப்ளை செய்வதற்கு தொழிலாளிகள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். தொழிற்சங்கத்தினரும் இப்போது தொழிலதிபர்களுடன் அனுசரித்துப் போவார்கள். தொழிலாளிகள் அடையவேண்டிய போனஸ், ஊதிய உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்காக அரசாங்கத்தில் எதிர்பார்த்த கடன் வந்துசேரும். மான்யமும் கிடைக்கும். வெளிமாநிலத்தில் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள். ஏற்கெனவே ஸ்டாக் இருந்த உற்பத்திப் பொருட்கள் முழுவதும் கூடுதல் விலைக்கு விற்கும். பங்குதாரர்கள் அதிகம் பேர் வந்துசேர்வார்கள்.
பெண்கள்
பெண்கள் மனதில் இதுவரை இருந்துவந்த பயம் அகலும். தங்களது பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். உடல்நிலையில் இருந்த பின்னடைவுகள் நீங்கி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வீட்டிற்கும், பிள்ளைகளுக்கும் தேவை யான பொன், பொருள் சேர்க்கை நடைபெறும். உறவினர்கள் வந்து செல்வார்கள். பிரிந்துவாழ்ந்த மகன் இப்போது உங்களைத் தேடிவருவார். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வந்துசேரும். ஒருசிலருக்கு தாய்வீட்டிலிருந்து வரவேண்டிய சொத்துக்கள் கிட்டும். உடன்பிறந்தவர்கள் இப்போது உங்களுக்கு அனுசரணையாகவே இருப்பார்கள். வெறுத்து ஒதுக்கியவர்களும் வலிய வந்துசேர்வார்கள். நீண்ட காலத்துக்குப்பிறகு இப்போது நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமைக்கு குறைவில்லை. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள்.
மாணவர்கள்
படிப்பில் முன்பு இருந்துவந்த மந்தநிலை மாறும். உங்களுக்கு ஞாபகசக்தி கூடும். ஒருசில உயர்கல்வி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வார்கள். அவர்களது கண்டுபிடிப்பு மக்களுக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும். ஒருசிலர் கேம்பஸ் செலக்ஷனில் தேர்வுபெற்று உடனடி வேலைவாய்ப்பையும் அடைவார்கள். ஆசிரியர்- மாணவர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் எதுவும் வராது. ஒருசில மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி கற்பார்கள்.
கலைஞர்கள்
கலைஞர்களைப் பொறுத்தமட்டில் இந்த ஆண்டில் வாய்ப்புகள் கூடுதலாகும். நீங்கள் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட உகந்த நேரம். தாய்மொழியைவிட வேற்றுமொழிப் படங்களில் உங்களுக்கு படவாய்ப்புகள் கூடும். முன்பு இருந்துவந்த பணமுடை நீங்கும். கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். திருமணம் ஆகாத கலைஞர்களுக்கு திருமணம் கைகூடும். முன்பு மறுத்துப் பேசியவர்களே உங்களுக்கு பெண் கொடுக்க முன்வருவார்கள். ஒருசில கலைஞர்கள் வெளிநாடு சென்று படப்பிடிப்புகளில் கலந்துகொள்வார்கள். வருமானம் இருமடங்காகும். நல்ல வழிகளில் சேமிப்பீர்கள்.
விவசாயிகள்
இந்த ஆண்டு விவசாயிகள் கூடுதல் மகசூலைப் பெறுவார்கள். விளைநிலங்களில் மா, தென்னை போன்ற மரங்களை வளர்க்கும் திட்டம் நிறைவேறும். விவசாயப் பணியில் கூடுதல் லாபத்தையும் பெறுவீர்கள். நவீன விவசாயக் கருவிகளைப் பயன்படுத்துவீர்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த மான்ய உதவிகள் வந்துசேரும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பொதுவாக இந்த ஆண்டு விவசாயிகள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள்.
அரசியல் பிரமுகர்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலில் நீங்கள் எதிர்பார்த்தபடி பலன்களை அடையமுடியவில்லை. தற்போது குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ல் வருவதால், உங்கள் குலதெய்வ அருளோடு தொட்டகாரியம் அனைத்திலும் நல்ல பலன்களை அடைவீர்கள். கெடுதல் செய்துவந்த கட்சிக்காரர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். நல்லவர்களின் ஆலோசனை உங்களுக்கு கிட்டும். தேர்தலில் போட்டியிடுபவர்கள் குலதெய்வத்தின் அருள்பெற வேண்டும். குலதெய்வ ஆசியுடன் வெற்றியைப் பெறுவார்கள்.
அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ள மேஷ‘ ராசி அன்பர்கள், இந்த ஆண்டு முழுவதும் நல்ல பலன்களை அடைவார்கள். கூடுதல் லாபத்தையும் பெறுவார்கள். மனைவி- மக்கள் ஒற்றுமையுண்டு. இதுவரை குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து வருவார்கள். உறவினர்கள் வருகையால் நன்மையுண்டு. விலகியிருந்த சொந்தங்கள் விரும்பிவந்து சேரும். இதுவரை உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் குறையும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்புகளை மீட்பீர்கள். கடன் தொல்லைகள் இல்லாமல் போகும். செய்யும் தொழிலில் வருமானம் கூடுதலாகும். பிள்ளைகள் வழியில் செய்யவேண்டிய சுபகாரிய நிகழ்ச்சிகளை நல்லபடியாக நடத்திமுடிப்பீர்கள். தாய், தந்தை ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். 80 சதவிகித நன்மையுண்டு.
பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:
கடந்த இரண்டு வருடங்களில் எதிர்பார்த்த இனங்கள் கைகூடாமல் போனது. இனி எதிர்பார்த்தவை கைகூடும். புதிய நண்பர்கள் சேர்வார்கள். அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பின்னடைவு ஏற்பட்டு சிரமத்தைக் கொடுத்த அனைத்து காரியங்களிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குலதெய்வ வழிபாடு உங்களை மேலும் சிறப்பாக வாழவைக்கும். தட்சிணாமூர்த்தி உங்களுக்கு ஆதரவாக உள்ளார். ஒருசிலர் அமைச்சர் பொறுப்பை ஏற்பார்கள். பதவிகள் தேடி வரும். 90 சதவிகித நன்மையுண்டு.
கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:
சிலர் தந்தைவழி உறவுகளால் சிரமத்தை அடையநேரும். மாணவ- மாணவிகள் கல்வியில் உயர்ந்துவருவார்கள். ஒருசிலர் குடும்பத்தில் வீடுகட்டும் யோகம் ஏற்படும். வியாபாரம் செய்கின்றவர்கள் உபரி வருமானத்தோடு, அதிக லாபத்தையும் பெறுவார்கள். நல்ல வரன் அமையும். திருமணமாகி செல்கின்ற இடத்திலும் சிறப்பாக வாழ்வார்கள்.
பரிகாரம்:
குரு 5-ல் உள்ள இந்த நேரத்தில் தங்கள் கோவிலுக்கு சென்றுவந்தால் நன்மைகள் நடக்கும். பூர்வீக சொத்துகளில் வில்லங்கம் வராது. முருகப் பெருமானையும், குருபக வானையும் வணங்கி வர நன்மையுண்டு. 27 கொண்டைக்கடலையை எடுத்து, அதனை மஞ்சள் துணியில் முடிந்து பூஜையறையில்வைத்து வணங்கி வர நன்மையுண்டு.
Post a Comment