
இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அங்கு மீனாவையே நடிக்க வைத்தனர். ஆனால் தமிழில் வாய்ப்பு கிட்டவில்லை. கவுதமியை நடிக்க வைத்து விட்டனர். பாபநாசம் படம் மீனாவுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படம் அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. கமலையும், கவுதமியையும் பாராட்டி கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:–
திரிஷ்யம் படத்தில் மலையாளம், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நான் நடித்து இருக்கிறேன். தமிழில் ரீமேக் ஆகியுள்ள அப்படத்தில் கமல் மிகவும் நன்றாக நடித்து இருக்கிறார். படத்துக்கு புது நிறத்தை கமல் கொடுத்து இருக்கிறார்.
குறிப்பாக அந்த படத்துக்கு நெல்லை தமிழிலில் புது பாஷை கொடுத்து இருக்கிறார். பாபநாசம் ஏரியா பாஷை படத்துக்கு இன்னும் பிளஸ் ஆக இருந்தது. கவுதமியும் ரொம்ப நன்றாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே நான் கவுதமி வேடத்தில் நடித்து இருக்கிறேன். கவுதமி கேரக்டரில் நிறைய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழுக்கு ஏற்ற மாதிரி நடித்து இருக்கிறார். ரொம்ப அழகாக நடித்து இருக்கிறார்.
Post a Comment