
ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று முதல் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.
இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த சுழற்பந்து வீச்சாளர் கரன்ஷர்மாவுக்கு பயிற்சியின் போது இடது கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் ஜிம்பாப்வே பயணத்துக்கான இந்திய அணியில் இடம் பெறமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. அவருக்காக மாற்று வீரர் யாரும் சேர்க்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment