ஹாரி மெட் சிஜல் படத்தை இயக்கியவர் டைரக்டர் இம்தியாஸ் ஆலி. இவர் தற்போது ஷாருக்கானை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படம் குறித்தும், அதில் ஷாருக்கானின் ரோல் குறித்து சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இம்தியாஸ் விளக்கினார்.
அப்போது பேசிய அவர், இப்படத்தில் ஜாப் ஹாரி மெட் சிஜல் படத்தில் டூரிஸ்ட் கைடாக ஷாருக்கான் நடிக்கிறார். ஹரிந்தர் சிங் மேத்தா என்ற கேரக்டரில் அவர் நடிக்கிறார். வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து விட்டு, என்ன செய்வது என தெரியாமல் இருக்கும் ஒரு கேரக்டர். அந்த நிலையிலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் இனிமையாக கழிக்கிறார்.
அனைவருக்கும் வழிகாட்டியாக இருப்பார். ஆனால் தான் எங்கே போகிறோம் என தெரியாதவராக இருப்பார். அந்த நடிப்பு திறமையை தான் நான் அந்த கேரக்டரிம் இருந்து எதிர்பார்க்கிறேன். அதற்கு ஏற்ற ஒருவராக ஷாருக்கான் தான் இருப்பார் என்றார். இப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment