சூதாட்டத்தில் ஈடுபட்ட தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் விளையாடுவதற்கு தடை விதிப்பதற்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோட்சோபே 2014 ஆம் ஆண்டுடன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த உள்ளூர் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
முதலில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த அவர் பின்னர் அதை ஒப்புக்கொண்டார். விசாரணையின் முடிவில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக சோட்சோபேக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
சோட்சோபே ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலாமிடத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment