திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறையை வெட்டி எடுத்து 400 டன் எடை யில் 64 அடி உயரத்தில் விஸ்வ ரூப மகா விஷ்ணு சிலை செதுக்கப் பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட கல் கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூரு புறப்பட உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் கோதண்ட ராம சாமி கோயில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோயிலில் 108 அடி உயரத் தில் விஸ்வரூப மகாவிஷ்ணு மற்றும் ஆதிசேஷன் சிலை அமைக்க கோயில் அறக்கட்டளை மூலம் முடிவு செய்யப்பட்டது.
அத்தகைய பிரம்மாண்ட சிலைகளை செதுக்கு வதற்காக கற்களை செயற்கைக் கோள் மூலம் தேடினர். இதற்கான கல், திருவண்ணா மலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக் குன்றில் இருப்பது தெரியவந்தது. பின்னர், மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதிப் பெற்று கற்களை வெட்டி எடுத்து சிலைகளை வடிவமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப் பட்டது.
64 அடி நீளம், 26 அடி அகலத் தில் 11 முகங்கள், 22 கைகளை கொண்ட விஸ்வரூப மகா விஷ்ணு சிலை மற்றும் 24 அடி நீளம், 30 அடி அகலத்தில் ஆதிசேஷன் சிலையை (7 தலை பாம்பு) ஸ்தபதிகள் செதுக்கத் தொடங்கினர். இப்போது பத்து சதவீத பணிகள் முடிந்து சிலை கர்நாடகா புறப்பட தயாராகி வருகிறது.
என்ன வினையோ தெரியவில்லை ஆரம்பம் முதலே பாரம் தாங்காமல் லாரியின் டயர்கள் வெடிக்கின்றன. அதனை சரி செய்து பிரம்மாண்ட வண்டியை நகர்த்தலாம் என்று பார்த்தால் மழை பொழிந்து சகதியில் மாட்டிக்கொள்கிறது. இவ்வாறான பிரச்சனைகள் நீடித்து வரும் நிலையில் கோரக்கோட்டை மற்றும் அண்டைக் கிராமங்களில் வசிக்கும் கிராம மக்கள் மிக உற்சாகத்தில் உள்ளனர்.
பிரமாண்ட சாமி சிலை தகவல் தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்குப் பக்தர்களுக்கு உணவு வழங்குவதோடு, பாறைகளைச் சுற்றிலும் கடைகளை நிறுவியுள்ளனர் அந்த கிராம மக்கள். அப்பகுதியில் தண்ணீர் பாட்டில்கள், கற்பூரம், பூ, மஞ்சள் குங்குமம், மற்றும் ஊதுவத்தி ஆகியவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது.
தினமும் இந்தச் சிலையை காண்பதற்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதால், தமிழகத்தின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும் கோரக்கோட்டை மாறியுள்ளது. எவ்வாறாயினும் சாமி சிலை கர்நாடகத்திற்கு போய் விடாது என்று அந்த கிராம மக்கள் உறுதியுடன் இருக்கின்றனர்.
Post a Comment