Ads (728x90)

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தி வருவது போன்று, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வருகிறார். ஜூனியர் என்டிஆரின் நடனத்துடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே விமர்சனங்களை சந்தித்துள்ளன.

மேலும், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் ஜூனியர் என்டிஆர், தற்போது ஜெய் லவகுசா என்ற படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். பாபி இயக்கும் இந்த படத்தை செப்டம்பர் 21-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆனால் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இந்த நேரத்தில் ஜூனியர் என்டிஆர் பிக்பாஸ் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வதால் படம் தாமதமாகும் நிலை ஏற்பட்டது.

அதனால் இதை தவிர்க்கும் முயற்சியாக இப்போது ஜெய் லவகுசா படப்பிடிப்பு லொகேசனை புனேவுக்கு மாற்றி விட்டார் ஜூனியர் என்டிஆர். புனேவுக்கு அருகில் உள்ள லோனாவலாவில்தான் தெலுங்கு பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கிறதாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget