Ads (728x90)

அவுஸ்­தி­ரே­லிய வெளிவி­வ­கார அமைச்சர் ஜூலியா பிஷப் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கைக்கு வருகை தந்­துள்ள நிலையில்  இன்று எதிர்க்­கட்­சித் ­தலை­வ­ரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனை சந்­திக்­க­வுள்ளார்.
இச்­சந்­திப்பு இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லிய உயர்ஸ்­தா­னிகர் ப்ரைஸ் ஹட்­சனின் உத்­தி­யோகபூர்வ இல்­லத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. அவுஸ்­தி­ரே­லிய வெளிவி­வ­கார அமைச்சர் ஜுலியா பிஷப்  பொரு­ளா­தாரம் மற்றும் பாது­காப்பு ஒத்­து­ழைப்­பு­களை வலுப்­ப­டுத்­து­வதை நோக்­காக கொண்டே இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 
இதே­வேளை ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாய­கத்தின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர் ஜெப்ரி பெல்ட்­மனை நாளை வெள்ளிக்­கி­ழமை காலையில் சந்­திக்­க­வுள்ளார். இச்­சந்­திப்பு கொழும்பில் உள்ள ஐக்­கிய நாடுகள் அலு­வ­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இச்­சந்திப்பின் போது சமகால அரசியல் நிகழ்வுகள் உட்பட பல்வேறு விட யங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டு ள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget