ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான தரவரிசையில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், 865 புள்ளிகளுடன் ‘நம்பர்–2’ இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா, 898 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் 10 விக்கெட் கைப்பற்றிய இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஹெராத், 866 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் புஜாரா, கேப்டன் கோஹ்லி முறையே 4, 5வது இடங்களில் உள்ளனர். முதல் மூன்று இடங்களை முறையே ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்தின் வில்லியம்சன் தக்கவைத்துக் கொண்டனர்.
ஆல்–ரவுண்டர்’களுக்கான தரவரிசையில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், இந்தியாவின் ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் நீடிக்கின்றனர். தென் ஆப்ரிக்காவின் பிலாண்டர், 5வது இடத்துக்கு முன்னேறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment