“யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையில் பொலிஸார் காட்டும் அவசரம் இந்தச் சம்பவத்தைத் திசை திருப்பும் முயற்சியாகவே நாம் எண்ணுகின்றோம். உண்மையான தாக்குதலாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்” இவ்வாறு வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் துணிச்சலானவர். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியமாட்டார். அவரால் அண்மைக்காலமாக நடத்தப்பட்ட வழக்குகள் மிகவும் பயங்கரமானவை.
எனவே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இந்தத் தாக்குதலை மேற்கொண்ட உண்மையான தாக்குதலாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் பொலிஸார் இந்த விடயத்தில் காட்டும் அவசரம் எமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
நீதிபதி மீதான உண்மையான இலக்கை பொலிஸார் திசை திருப்ப முனைகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது” என்று சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் மேலும் தெரிவித்தார்.

Post a Comment