புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடுவதால் சாட்சியங்களை முன்னெடுப்பதா? ஒத்திவைப்பதா? என்ற முடிவை தீர்ப்பாயம் இன்று காலை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயம் இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தின் 2ஆவது மாடியிலுள்ள திறந்த மன்றில் கூடுகிறது.
ஊர்காவற்றுறை நீதிவான் மொகமட் றியாழ் இன்று சாட்சியமளிக்க தீர்ப்பாயத்தால் அழைக்கப்பட்டிருந்தார். அத்துடன், வழக்கின் முக்கிய சாட்சியமான வித்தியா படுகொலை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா சாட்சியமளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அவரது சாட்சியம் நீண்ட நேரம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment