பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமாகிவிட்டார் தென்னிந்திய நடிகரான பிரபாஸ். இவரை இயக்க கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை போட்டி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரை கவர்ந்துள்ளார் பிரபாஸ். தற்போது ஜகா ஜசூஸ் படத்தில் நடித்துள்ள ரன்பீர், அப்படம் தொடர்பான புரொமோஷனில் பிஸியாக உள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் சமீபத்தில், உங்களை கவர்ந்த நடிகர் யார் என்று கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த ரன்பீர், "எனக்கு நிறைய நடிகர்களை பிடிக்கும். இருந்தாலும் நடிகர் பிரபாஸை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பாகுபலி படத்தில் அவ்வளவு அருமையாக அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் சிறப்பாக நடித்திருந்தார்" என்று கூறியுள்ளார்.
ஜகா ஜசூஸ் படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment