சச்சினின் பக்கத்து வீட்டுக்காரரான பூனம் பாண்டே
பாலிவுட்டின் சர்ச்சை நடிகை பூனம் பாண்டே. கவர்ச்சியான போட்டோக்களையும், வீடியோக்களையும் போட்டு அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்துபவர். 2011 ஆண்டு நடந்த உலக கோப்பையின் போது இந்திய அணி உலக கோப்பையை வென்றால் என் ஆடைகளை துறப்பேன் என்று கூறி பரபரப்பு கிளப்பியவர். இவர், தற்போது தனது வீட்டை மாற்றி, மும்பை, பாந்த்ராவில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இருக்கும் வீடு அருகே குடிபெயர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோவில், "கிரிக்கெட்டிற்கும், எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. சச்சின் வீட்டுக்கு பக்கத்தில் குடியிருக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. அந்தவகையில் நான் மிகவும் அதிர்ஷ்டக்கார பெண், அவரின் பக்கத்து வீட்டுக்கு அருகே உள்ளேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Post a Comment