Ads (728x90)

ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது படத்தின் கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் பணிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஸ்டுடியோக்களில் இரவு பகலாக நடந்து வருகிறது. 'பாகுபலி 2' படத்தை மிஞ்சும் அளவிற்கு ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அவை இருக்கும் என்கிறார்கள்.

இதனிடையே, இப்படத்திற்காக டூயட் பாடல் காட்சி ஒன்று சென்னையில் 12 நாட்கள் படமாக்கப்பட உள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கு ஒன்று சென்னையில் உருவாகி வருகிறது. இந்த அரங்கில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் ஆகியோர் பாடி நடிக்கும் பாடல் காட்சி 12 நாட்கள் படமாக்கப்பட உள்ளதாம். எமி ஜாக்சனை மட்டும் கூடவே மேலும் 10 நாட்களுக்கு ரிகர்சலுக்கு வரச் சொல்லி இருக்கிறார்களாம்.

ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தில் 'என்னோடு நீ இருந்தால்' பாடலை 14 நாட்கள் படமாக்கினார்களாம். இப்போது '2.0' பாடல் காட்சி ஒன்றை 12 நாட்களுக்கு படமாக்க உள்ளார் ஷங்கர். ஏ.ஆர்.ரகுமான் இந்தப் பாடலின் உருவாக்கத்தில் கடைசி கட்ட வேலைகளில் இருக்கிறாராம்.

2.0 படம் 2018 ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget