ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையிலிருந்து பங்குபற்றிய வீர, வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருதுகள் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் 50 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த ஒலிம்பிக் வீர, வீராங்கனைகளுக்கு இந்த கௌரவிப்பு வழங்கப்படவுள்ளது.
இலங்கையிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியவர்களில் தற்போது உயிருடன் இருப்பவர்கள் 67 வீரர்கள் எனவும் அதில் 23 வீரர்கள் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனால் இன்றைய கௌரவிப்பு நிகழ்வில் மொத்தம் 44 வீர, வீராங்கனைகள் ஜனாதிபதி யினால் விருது வழங்கி கௌரவிக்கப் படவுள்ளனர்.
கடந்த சில நாட்களில் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய வீர, வீராங்கனைகள் இணைந்து ஒரு சங்கம் ஒன்றையும் புதிதாக உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment