இவரின் வருகை இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவினை பலப்படுத்தும் முக்கிய அம்சமாக அமையும் என இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலம் மேலும் தெரிவித்துள்ளது.
பிராந்திய பாதுகாப்பு, ஒத்துழைப்பு, விஞ்ஞான வளங்கள் மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அபிவிருத்தி புதிய பொருளாதார வாய்ப்புகள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான சந்திப்பின் போது ஏற்கனவே உள்ள வலுவான இருநாடுகளுக்கிடையிலா இரு தரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கான வழிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்
வெளிவிவகார அமைச்சரின் வருகையின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுடனான சந்திப்பு அமையவுள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய வெளிவிவார அமைச்சர் ஜூலி பிஷப், இலங்கை முகம் கொடுக்கும் பாரிய சுகாதாரப் பிரச்சினையான டெங்கு நுளம்புகளை அழித்தல் மற்றும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவுள்ள உதவிகளை இவ் விஜயத்தின்போது அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment