பென் எமர்சன் சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்து கைதிகளை சந்தித்துள்ளார். எந்த அடிப்படையில் இவர் சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. யார் இதற்கான அனுமதியினை வழங்கியது. நீதி அமைச்சா, சிறைச்சாலை அமைச்சா, அல்லது வெளிவிவகார அமைச்சா இதற்கான அனுமதியை வழங்கியது யார் என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு இந்த மூன்று துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும் இவ்விடயம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு முன்னைய அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடு காரணமாக ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்கள் புரிந்துணர்வின் அடிப்படையில் இவ்வாறு அவர்கள் விரும்பிய இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment