மீள்குடியேற்ற அமைச்சால் வீட்டுத் திட்டத்துக்காக வழங்கப்படும் பணம் போதாதுள்ளது. அதற்காக பொருத்து வீடுகள் எமக்கு வேண்டாம். கல் வீட்டுக்கான நிதியை அதிகரித்து வழங்க வேண்டும். இவ்வாறு மீள்குடியேற்ற அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர் மயிலிட்டியில் மீள்குடியமர்ந்த மக்கள். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் மயிலிட்டித் துறைமுகம் விடுவிக்கப்பட்டது. அந்தப் பகுதி கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சரிடமே மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
“தற்போது வீட்டுத் திட்டத்துக்காக 8 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. இந்தத் தொகை 5 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது. தற்போது அது போதாதுள்ளது. இந்தத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். எமது பிரதேசத்துக்கு உகந்த கல் வீடுகளையே நாம் கோருகின்றோம். எமக்குப் பொருத்து வீடுகள் வேண்டாம். கல் வீட்டுக்கான தொகையையே அதிகரித்துத் தர வேண்டும் என்று கோருகின்றோம்.”- என்று மக்கள் மீள்குடியேற்ற அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment