யாழ்ப்பாணம் தீவகப்பகுதியில் ஏற்பட்டுள்ள வரட்சி பாதிப்புக்கள் தொடர்பில் நேற்று நேரில் சென்று ஆராய்ந்தார் கொழும்பு இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா. ஊர்காவற்றுறைப் பிரதேசத்துக்குச் சென்று நிலமைகளை ஆராய்ந்த அமைச்சர், வறட்சியை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்தினார்.
ஊர்காவற்துறை பிரதேசத்தில் உள்ள குளங்களை சீரமைத்தல், மழை நீர் கடலுக்கு செல்லாதவாறு தடுப்பணைகளை கட்டுதல், பாரவூர்தியுடன் கூடிய பவுசர், குடி தண்ணீர் விநியோகத்துக்கான நீர் தாங்களிகள் என்பன தேவை என பிரதேச செயலக அதிகாரிகளால் கோரப்பட்டன. வறட்சியால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், பெண்தலைமை குடும்பத்தை சேர்ந்தவர்கள், விசேட தேவை உடையவர்கள் போன்றவர்களுக்கு வரட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. அவற்றை செவிமடுத்த அமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார் என்று தெரிவிக்கப்பட்டது.
Post a Comment