
நடிகை வரவலட்சுமியும், விஷாலும் தீவிரமாக காதலித்து வருவதாக நீண்டகாலமாகவே செய்தி வெளியாகி வருகிறது. இருவரும் சேர்ந்து மதகஜராஜா படத்தில் நடித்தார்கள். அந்தப் படம் வெளிவரவில்லை. அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கவுமில்லை. இடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியவர்கள் விஷாலை காமராஜர் ரேன்ஞ்சுக்கு ஒப்பிட்டு பேச... பின்னர் பேசிய விஷால் "காமராசர் மாதிரி மக்கள் பணியாற்றுவேன். அவர் மாதிரி திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க மாட்டேன். அப்படிச் செய்தால் மங்களகரமான நடிகை கோவித்துக் கொள்வார்" என்று தன் காதலை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் லிங்குசாமி இயக்கும் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் வரலட்சுமி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அவர் கேரக்டர் பற்றி ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
முதல்பாக கதைப்படி மீரா ஜாஸ்மின்தான் விஷாலின் காதலி. இரண்டாம் பாகத்தில் அந்த காதல் நிறைவேறாமல் போவதாக காட்டி மீரா ஜாஸ்மினை கழற்றி விடுகிறார்கள். புதிய காதலியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த நிலையில் மாமனைத்தான் கட்டிக்குவேன் என்ற காத்திருக்கும் முறைப்பெண் கேரக்டரில் வரலட்சுமி நடிக்க இருப்பதாகவும், திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்த மாதிரியான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது
Post a Comment