Ads (728x90)

குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் பட்டியலில் முதல் ஆளாக இருக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா பிரபலங்கள் சிலர் மீது தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வந்தார். கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அவர், மீண்டும் தனது வம்பிழுக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார். இந்தமுறை இவர் மீண்டும் மோகன்லால், மம்முட்டியை வம்பிழுக்கும் விதமாக கருத்துக்களை கூறியுள்ளார். அதுவும் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் ஒப்பிட்டு.

நேற்று முன்தினம் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், செல்போன் நிறுவனம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள கொச்சி வந்திருந்தார். அவரைக்காண கொச்சி எம்.ஜி.ரோடு முழுவதும் ரசிகர்கள் திரண்டிருந்தார்கள் என்பதும் அதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததும் உண்மைதான். இதனை சுட்டிக்காட்டியுள்ள ராம்கோபால் வர்மா, “இத்தனை வருடத்தில் நமக்கு இப்படி ஒரு கூட்டம் கூடவில்லையே என்கிற பொறாமை சன்னி லியோன் மீது மோகன்லால், மம்முட்டிக்கு நிச்சயம் எழுந்திருக்கும்” என டுவீட் தட்டினார்.

இது மோகன்லால் ரசிகர்களை உசுப்பேற்றி விட்டு அவர்களது கோபத்தை கிளறியுள்ளது.. சில மாதங்களுக்கு முன் கொச்சியில் மோகன்லால் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் அலைகடலென திரண்டிருந்த ரசிகர் கூட்டத்தையும் அதன் வீடியோவையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்ட சில ரசிகர்கள், இந்தக்கூட்டத்தை நன்றாக கண்களை திறந்து வைத்துக்கொண்டு பாருங்கள். அப்புறமாக கருத்து சொல்லலாம்” என பதிலடி கொடுத்துள்ளனர்

Post a Comment

Recent News

Recent Posts Widget