Ads (728x90)

திருச்சி:தேர்தலில் வெற்றி பெற்று ரஜினி கோட்டையில் அமரும் நாள் வரும். என திருச்சியில் காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் தமிழருவி மணியன் பேசினார். அவர் மேலும் பேசியதாவது: இரண்டு திராவிட கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்பது எனது சபதம். ரஜினியை தவறவிட்டால் தமிழகம் வாழ்வதற்கும் எழுவதற்கும் வழியில்லை. தமிழகத்தில் "சிஸ்டம்" கெட்டுவிட்டது என திருக்குறள் போல் சொன்னார் ரஜினி. துாய்மையான ஆட்சியை தர புறப்பட்டுவிட்டார் ரஜினி. தன் பின்னால் இருப்பவர்கள் ஊழலின் நிழல் படாதவர்களாக இருக்க வேண்டும் என ரஜினி விரும்புகிறார். ரஜினியின் பெருந்தன்மை என்னை நெகிழ வைத்தது. நான் ரஜினியை சந்தித்தபோது, நான் கேட்டேன் நீங்கள் 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவீர்களா? என கேட்டேன் அதற்கு அவர், நான் அரசியலுக்கு வருவது குறித்து முடிவு எடுத்துவிட்டேன். அதனால் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget