தியேட்டர்களில் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தியேட்டரில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்புகுழு அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த விவேகம் படத்திற்கு தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தேவராஜ் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக முழுவதும் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் சமீபத்தில் வெளியான விவேகம் படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது, அப்படி வசூலித்த தியேட்டர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்களின் பட்டியலும் ஆதாரத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு வருகிற செப்டம்பர் 11ந் தேதிக்குள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட 28 தியேட்டர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment