Ads (728x90)

அமெரிக்காவை மிரட்டிக் கொண்டிருந்த பயங்கர புயலான ‘ஹார்வி’, மத்திய டெக்சாஸ் பகுதியில் கரை கடந்தது. அப்போது, 195 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. அமெரிக்காவில் உருவான ‘ஹார்வி’ என்ற பயங்கர புயலால், நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை செய்தது. பேரழிவு ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்பட்டிருந்த இந்த புயல் நேற்று காலை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அரன்சாஸ் - ஓ கூனூர் துறைமுகங்களுக்கு இடையே கரை கடந்தது.

அப்போது, மணிக்கு 195 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது, பலத்த மழையும் பெய்தது. இதனால், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர்.

புயல் கரை கடந்த பகுதிகளில் ஏராளமான கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையங்களும், சுத்திகரிப்பு ஆலைகளும் உள்ளன. அவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. விமானங்கள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஹார்வி புயல் கரையை கடந்த போதிலும், இன்னும் டெக்சாஸ் மாகாணத்தின் மீது மையம் கொண்டுள்ளது.

இதனால், அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை செய்யும் என்றும், இதன் காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அவர் அதிபராக பதவியேற்ற பிறகு அமெரிக்காவை தாக்கும் முதல் புயல் இதுதான்.

 கடந்த 2005ல் புளோரிடாவை தாக்கி சின்னாபின்னமாக்கிய ‘வில்மா’ என்ற புயல்தான் அதிக சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஹார்வி புயல் அதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget