வடகொரியா அடுத்தடுத்து மூன்று ஏவுகணைகளை விண்ணில் ஏவி சோதனை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. இதனால், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவானது. தற்போது, போர் பதற்றம் சற்றே தணிந்துள்ள நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.வடகொரியாவின் கிட்டயராங் பகுதியில் இருந்து மூன்று ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.
அந்த ஏவுகணைகளில் முதலாவது மற்றும் மூன்றாவது சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள், பறக்க தவறியதாவும், இரண்டாவது சோதனை செய்யப்பட்ட ஏவுகணை, ஏவப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்து சிதறி கடலில் விழுந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.இந்நிலையில், அமெரிக்காவுடன் தொடர் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் வடகொரியா, புதிய ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்திருந்தது. இந்த ஏவுகணை குவாம் தீவை குறிவைத்து ஏவப்பட்டிருக்கலாம் என தென்கொரியா சந்தேகிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment