முதல்வர் பழனிசாமி - துணைமுதல்வர் ஓபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு, தனக்கு எதிராக இருக்கும் பலரையும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்குவதாக தினகரன் அறிவித்து வந்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரையும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்து வந்தார்.
அவர்களுக்கு பதிலாக தனது ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் நியமிப்பதாகவும் அறிவித்தார்.தினகரன் கட்சியிலேயே இல்லாத போது அவரின் நீக்கமும், புதிய உறுப்பினர்கள் நியமனமும் செல்லாது என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக தினகரன் இன்று (ஆக.,27) வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்குவதாக அறிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக எஸ்.கே.செல்வம் நியமிக்கப்படுவதாகவும், சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment